• Monthlywise

    April 2024
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
  • for you

  • ஆத்மாவும் அதுபடும்பாடும்

    வெளியீடூ 4

மேற்கோள்கள்.

மதம் மனிதனை, அவனது போராட்ட உணர்வு வேகத்தை தடுத்து முடக்கிவிடுகிறது. அது தாழ்வுணர்ச்சியையும், கீழ்படியும் மனப்பான்மையையும் ஊட்டி வளர்க்கிறது. இறுதியில் இன்று நிலை கொண்டுள்ள அமைப்பு முறையை ஒப்புக்கொள்ளச் செய்கிறது. அதே சமத்தில் குறுகிய மனப்பான்மை படைத்த வெறியை உண்டாக்குகிறது. இதர கோட்பாட்டாளர்கள் மீது எவ்வித சகிப்பும் இல்லாமல் சாகும் குணத்தை அதாவது வேறு வெளிச்சத்தில் பார்ப்பவர்களைக் கண்டு சகிக்காத நிலையை உண்டாக்குகிறது.

இந்த சமய சார்பற்ற உலகியல் சார்பின் அஸ்திவாரத்திலேயே உள்ள முரண்பாடுகளில் இருந்துதான், சமுதாய பகைமைகளிலிருந்துதான் மதம் வெளிப்பட்டு தோன்றியது. எனவே மதத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் இன்றைய நிலையிலுள்ள சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவது ஒன்றே வழி.

முழுமையாகக் காண

இந்த இடுக்கைக்கான முழுமையான பதிவுகளைக்காண

இங்கே சொடுக்கவும்

ஆமர்பத்தை நோக்கி தொடர் -17

தொடர் 17

யார் இந்த இப்லீஸ் ?     எங்கிருந்து வந்தான் ?    எதற்காக வந்தான்?

இப்லீஸே ஸுஜூது  செய்பவர்களுடன் நீ ஆகாமல் இருப்பதற்கு உனக்கு என்ன வந்தது?

(குர்ஆன் 15:32)

“நான் உனக்குக் கட்டளையிட்ட பொழுது நீ ஸுஜூது செய்வதை விட்டும் உன்னை எது தடுத்தது என்று அவன் (அல்லாஹ்) கேட்டான்…

(குர்ஆன் 7:12)

அல்லாஹ்வின் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். அவன் ஸுஜூது செய்யக் கூறியது மலக்குகளிடம் மட்டுமே. இப்லீஸிடம் ஆதமிற்கு ஸுஜூது செய்யக் கூறப்படவே இல்லை ஏனென்றால் அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்….

முழுமையாகப்படிக்க 17

ஆரம்பத்தை நோக்கி- தொடர் 13

திருக்குர்ஆன் இஸ்லாமிய நம்பிக்கைகளின் முதுகெலும்பு. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகளின் எழுத்து வடிவமே குர்ஆன். அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்க முடியாது. அதாவது குர்ஆனில் முரண்பாடு இருக்க முடியாது என்பது முஸ்லீம்களின் வாதம். ஒரே ஒரு பிழை இருந்தாலும் இந்த குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை எளிதாக கூறி விடலாம்.  குர்ஆனைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,…

தொடர்ந்து படிக்க

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 3

தொடர் -3

வழிபாடுகளில் கவனம் தேவையா?

 முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன்.  இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்த கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

தொடர்ந்து படிக்க

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 2

தொடர் -1

தொடர் -2

தேடலின் ஆரம்பம்

 72 கூட்டத்தினர் யார்?

முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள்

 ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் (சஹர்) அதிகாலை நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்

பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும்முகம்மதுநபி மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. அதிலிருந்து வரலாற்றைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன். எனது தேடலில்….

தொடர்ந்து படிக்க

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 1

இசுலாம் ஒரு மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்றும், இசுலாம் ஒரு எளிய மார்க்கம் என்றும், இசுலாமியக் கொள்கைகள் மட்டுமே காலங்காலத்திற்கும் பொறுத்தமான வாழ்க்கைக்கு வழிமுறைகளைக் கொண்டுள்ளது; கடைபிடிக்க சிறந்தது என்றும் இசுலாமியர்கள் கூறுகின்றனர். இந்து, கிறித்துவ மதங்கள் போன்று இசுலாமும் ஒரு பிற்போக்கானதே என்பதை ஒரு நீண்ட தொடர்மூலம் விரிவாக விளக்குவதே இத் தொடர்.

இத் தொடர், இசுலாம் பற்றி அறியாதவர்களுக்கும் எளிமையாக, அதன் கொள்கைகள் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறோம்.

வாசகர்கள் தங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளகிறோம். தங்களின் கருத்துப் பதிவுகள் எமக்கு இதனை மேலும் செழுமைப்படுத்திட பேருதவியாக இருக்கும் என்பதையும் சுட்டிட விழைகிறோம்.

தொடர் 1:

எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்உலகத்தின் எல்லா வித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட நபர்களையும் அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும் தான் நம்பி இருக்கின்றன.”

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

துவங்கும் முன்

 ஹதீஸ்கள் பற்றி ஓர் சிறிய அறிமுகம்

 என் சம்பந்தமாக எதையும் எழுதி வைக்காதீர்கள் என முகம்மதுநபி  உத்தரவிட்டிருந்தார்கள் .

 குர்ஆன்  எழுதிப் பதிவு செய்யப்படும் சூழ்நிலையில் ஹதீஸும் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம்? எது  முகம்மதுநபியின் பொன்மொழி? என்பதில்  குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை முகம்மதுநபி சொன்னார்கள். ஆகவே  நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

 ஆயினும்  அபூஹூரைரா போன்ற ஓரிரு முகம்மதுநபியின் தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று….

தொடர்ந்து படிக்க

திருட்டு ஆனாலும் சட்டப்படி தான் திருடுவோம்.

தோழர் சம்புகன் ஒரு சென்ட்ரிங் தொழில் செய்பவர். பட்டதாரியும் கூட. சமூக வாழ்க்கை, பொது தொடர்பு ஆகியவற்றில் 20 வருட அனுபவமுள்ளவர். இவர் ஒரு “ஏர் செல்லின்” வாடிக்கையாளர். ஒருநாள் அவருக்கு செல்பேசியில் ஒரு அழைப்பு வந்து, உடன் நின்று (Missed call)  விடுகிறது. அவரது தொழில் சார்ந்தவர்கள் அவருக்கு ‘தவறிய அழைப்புகளாகவே’ வழமையாக அழைப்பு விடுபவர்கள். காரணம் இவர் ஒரு ஒப்பந்தக்காரர்.

தொடர்ந்து படிக்க

யார் நமது தலைவர்கள்?

தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், புதுவை மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தலைவர்கள் யார்?, தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் திடமான கொள்கைகளும் பிரச்சாரங்களும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைவர் என்பவர் எப்படி இருப்பார்?

பொதுவுடமைப் பாதையில் உள்ள தலைவர்:

இவர், தன் தனிப்பட்ட நலன் என்பதும் சமூக மக்களின் நலத்துடன் பிணைக்கப்பட்டதொன்று என்பதை புரிந்துகொண்டு முதலில் ஒரு சமூகத் தொண்டனாக மக்களின் நலனுக்காக மக்களிடையே பணியாற்றுகிறார். அதன் வழியே தன்னுடன் பலரையும் இணைத்துக்கொண்டு பணியாற்ற முயற்சிக்கிறார். பிற தோழர்கள் மத்தியில் மக்களுக்கான பணியாற்றுவதில் சளைக்காமல் முதன்மையானவராக பணியாற்றுகிறார். அதன் வெற்றி

முழுமையாகப் படிக்க

 

தினமலரின்

சேலம் மாவட்டத்திலுள்ள 108 ஓட்டுனர்கள் வேலைநிறுதம்செய்துள்ள செய்தியை வெளியிட்டுள்ள தினமலர் நரித்தனமாக பொதுமக்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் தவறான செய்தி ஒன்றையும் இணைத்துள்ளது. அப்பத்திரிக்கை ஒரு ஓட்டுனர், ஒரு உதவியாளர் தவிர 4 உதவியாளர்கள் உள்ளதாக வாந்தி எடுத்துள்ளது. ஒரு வண்டிக்கு ஒரு 12 மணிநேர ஷிஃப்ட்டுக்கு ஒரு ஓட்டுனரும் (Pilot)  ஒரு EMT எனப்படும் மருத்துவ உதவியாளர் மட்டுமே.

தினமலர் செய்தியைக்காண இங்கே சொடுக்கவும் 07–03-2010 சேலம் மாவட்ட செய்